2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது முதிர்வடைந்த பயனாளிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

முதல்வரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 18 வயது முதிர்வடைந்த பயனாளிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


கோவை: இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 18 வயது முதிர்வடைந்த பயனாளிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நல இயக்குநர் தலைமையில் மே 17ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பம் செய்து அசல் வைப்பு நிதி பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில் 18 வயது முதிர்வடைந்தவர்களை கண்டுபிடித்து உரிய ஆவணங்களுடன் கருத்துரு பெற்று தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலமாக முதிர்வு தொகையை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கோவை மாவட்டத்தில் 5 மண்டலங்கள், 12 வட்டாரங்கள் மற்றும் வால்பாறை நகராட்சி பகுதிகளில் இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்து அசல் வைப்பு நிதி பத்திரம் பெற்று 18 வயது நிரம்பிய பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் அல்லது மண்டல அலுவலகங்களில் உள்ள மகளிர் ஊர் நல அலுவலர் அல்லது சமூகநல பிரிவு அலுவலர்களிடம் அசல் வைப்பு நிதி பத்திரம், பயனாளிகள் கடவுச்சீட்டு புகைப்படம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல், பயனாளிகள் பெயரில் தனி வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய சான்றுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...