கோவை குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தகவல் பகுப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளர் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளர் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல் பகுப்பாளர் (Data Analyst) பணியிடத்திற்கு பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் பி.ஏ, பி.சி.ஏ, பி.எஸ்.சி - புள்ளியியல், பி.எஸ்.சி - கணிதம் (10,+2,+3) என்ற முறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு நிறுவனத்தில் 2 ஆண்டுகள் தகவல் தொகுப்பாளராக பணிபுரிந்து அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஜூன் 15 ஆம் தேதி பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை https://Coimbatore.nic.in இன்றைக்கு இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோயம்புத்தூர்- 641018. தொலைபேசி எண்: 0422 - 2300305 என்ற முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...