கோவையில் 7 நாட்கள் நடக்கும் பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கோவையில் நாளை வ.உ.சி மைதானத்தில் பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி நடக்க இருக்கிறது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.


கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் 19ஆம் தேதி நாளை பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் ஓராண்டு சாதனை ஓவியக் கண்காட்சியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தொல்லியல் துறை சார்பில் கீழடி, பொருநை, கொடுமணல், மயிலாடும்பாறை ஆகிய தொல்பொருள் கண்காட்சியும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சியும், வருகின்ற 25ம் தேதி வரை தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியினை பொதுமக்கள், தமிழ் பற்றாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் என்று அனைவரும் பார்வையிட்டு தெரிந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...