இந்திய துணை ஜனாதிபதி கோவை வருகை - அவினாசி சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடு மாநகர போலீஸ் அறிவிப்பு!

நீலகிரியில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நாளை நீலகிரி வருவதை தொடர்ந்து அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து அவர் கார் மூலம் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.

துணை ஜனாதிபதி பயணத் திட்டத்தை முன்னிட்டு மாநகரில் அவிநாசி சாலையில் மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. மேலும் விமான நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் மற்ற அவசர வேலைக்கு செல்பவர்கள் தங்கள் பயண திட்டத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு மாநகர போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேபோல் வரும் மே.15 (ஞாயிற்றுக்கிழமை) கோவை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து, விமான நிலையம், காளப்பட்டி வழியாக துணை ஜனாதிபதி கார் மூலம் உதகமண்டலம் செல்ல உள்ளார்.

இந்த வழித்தடங்களில் காலை 6.30 மணி முதல் 9 மணி வரை அவினாசி சாலை, காளப்பட்டி சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கனரக வாகனம் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய பணிக்கு செல்வோர் முன்கூட்டியே பயணத் திட்டங்களை திட்டமிட வேண்டும் என மாநகர காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...