புதிய பட்டதாரிகளுக்கு கோவை ஸ்மார்ட்‌ சிட்டி நிறுவனத்தில்‌ பணிபுரிய ஓர்‌ அரிய வாய்ப்பு..!

மேலும்‌, விவரங்களை http://internship.aicte-india.org இணையதளத்தில்‌ அறியலாம்‌. ஆர்வமுள்ள அனைத்து தகுதி வாய்ந்த மாணவர்களும்‌ விண்ணப்பிக்கலாம்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவித்துள்ளார்.



கோவை: நகர்புற சுற்றல்‌ வேலை வாய்ப்பு‌ திட்டம் (THE URBAN LEARNING INTERNSHIP PROGRAM — TULIP) புதிய பட்டதாரிகளுக்கு கோயம்புத்தூர்‌ ஸ்மார்ட்‌ சிட்டி நிறுவனத்தில்‌ பணிபுரிய ஓர்‌ அரிய வாய்ப்பு வழங்கியுள்ளது.

நகர்புற சுற்றல்‌ வேலை வாய்ப்புத்‌ திட்டம்‌ வீட்டு வசதி மற்றம்‌ நகர்புற அலுவல்‌ அமைச்சகம்‌ (MoHUA) மற்றும்‌ அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்‌ (AICTE) ஆகியவற்றுக்கும்‌ இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்‌.

TULIP-திட்டத்தின் கீழ்‌ புதிய பட்டதாரிகள்‌ தன்னம்பிக்கை பெறுவதற்கும்‌, மாநகராட்சி புதுமையான யோசனைகளை வழங்குவதற்கும்‌ அரிதான வாய்ப்புகளை கோயம்புத்தூர்‌ ஸ்மார்ட்‌ சிட்டி நிறுவனம்‌ அளிக்க முன்வந்துள்ளது.

இத்திட்டத்தில்‌ பயன்பெற,

1.விண்ணப்பதாரர்கள்‌ கடந்த 18-மாதங்களுக்குள்‌ பட்டப்படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும்‌.

2.இந்த வேலை வாய்ப்பு பயிற்சிக்கான கால அவகாசம்‌ அதிக பட்சம்‌ ஆறுமாதங்கள்‌ ஆகும்‌. பயிற்சிக்கான மாத ஊக்கத்தொகை ரூ.10,000/-

*Visual Communication

*B.Arch/M.Arch

*B.E/B.Tech(IT)

*B.E/B.Tech(Civil)

*MBA/PGDM in Event Management

*MA (Tamil/English) Communication

3.மாநகராட்சியின்‌ பணி சூழல்‌ பட்டதாரிகளுக்கு சவாலான தளமாகும்‌. இது அவர்களை அடுத்த நிலைக்கு தயாராக்குகிறது.

4.தகுதி வாய்ந்த பட்டதாரிகளுக்கு இந்தியா முழுவதிலுமுள்ள வாய்ப்புகளை ஒரே மேடையில்‌ ஒருங்கிணைத்து நகர்புற நிர்வாகத்தில்‌ விண்ணப்பிக்க இத்திட்டம்‌ அனுமதிக்கிறது.

5.ஆன்லைன்‌ மூலம்‌ விண்ணப்பிக்க கடைசி தேதி 24.05.2022 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இணை வலைத்தளம்‌ http://internship.aicte-india.org

மேலும்‌, ஒவ்வொரு பிரிவிலும்‌ உள்ள பயிற்சிக்கால காலி பணியிட விவரங்களை இணையதளத்தில்‌ அறியலாம்‌. ஆர்வமுள்ள அனைத்து தகுதி வாய்ந்த மாணவர்களும்‌ விண்ணப்பிக்கலாம்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...