கோவை தேசிய சுகாதார குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் தேசிய சுகாதாரக் குழுமத்தில் உள்ள தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் தேசிய சுகாதாரக் குழுமத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தேர்வு நடைபெற உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் மூலம் DEIC- Optometrists- 1, Refrigeration Mechanic-1, Sanitary Worker-1, போன்ற பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது.

இந்த பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, வரும் 20ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பந்தய சாலையில் உள்ள துணை இயக்குனர் சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.

மேற்படி, பணிகளுக்கான நேர்முகத் தேர்வு வரும் ஜூன் 2ம் தேதி காலை 10 மணி அளவில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விரிவான விவரங்களை கோவை மாவட்ட இணையதள முகவரி https://coimbatore.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...