ரயில்வே துறை பணியிடங்களுக்கான தேர்வு எழுத வருபவர்கள் வசதிக்காக 8 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தேர்வு எழுத வருபவர்களின் வசதிக்காக, மங்களூரு - கோவை, கோவை - நிஜாமுதீன், கோவை - நாகர்கோவில், பெங்களூரு - கோவை (உதய்) ஆகிய நான்கு ரயில்களில் இரு மார்க்கத்திலும் ஒரு முன்பதிவு (படுக்கை வசதி) பெட்டி இணைக்கப்படும்.


கோவை: ரயில்வே நிலையம் அதிகாரி உட்பட 24 ஆயிரத்து, 549 காலிப்பணியிடங்களுக்கு, வரும் 9, 10ம் தேதிகளில் இரண்டாம் நிலை தேர்வு நடக்கிறது.

இந்த நிலையில், தேர்வு எழுத வருபவர்களின் வசதிக்காக, மங்களூரு - கோவை, கோவை - நிஜாமுதீன், கோவை - நாகர்கோவில், பெங்களூரு - கோவை (உதய்) ஆகிய நான்கு ரயில்களில் இரு மார்க்கத்திலும் ஒரு முன்பதிவு (படுக்கை வசதி) பெட்டி இணைக்கப்படுகிறது.

மேலும், கொச்சுவேலியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் வரும், 7, 10 ம் தேதி இயக்கபடாவுள்ளது. இந்த ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை நிலையங்களில் நின்று செல்லும் என்று, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...