கோவை மாவட்டத்தில் வரும் 8ஆம் தேதி 3,679 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

வரும் 8 ஆம் தேதி, 29 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதால், இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் வரும் 8-ந் தேதி 29-வது மெகா கொரோனாதடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதை அடுத்து,

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று 4-வது அலை பரவ அதிக வாய்ப்புள்ளது. அதனால், பொதுமக்கள் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மாவட்டத்தில்,ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் வரும் 8-ந் தேதி சிறப்பு மாபெரும் 29-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். மாவட்டத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுமார் 2,505 தடுப்பூசி முகாம்களும், மாநகராட்சி பகுதிகளில் 950 முகாம்களும், நகராட்சி பகுதிகளில் 224 முகாம்கள் என்று ஒட்டு மொத்தம் 3,679 இடங்களில் இந்த முகாம் நடைபெறும்.

இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக் கொண்டவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், தவறாமல் இந்த 29-வது கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு 4-வது அலை தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், முகாம் நடைபெறும் இடங்களை பொதுமக்கள் coimbatore.nic.in என்ற மாவட்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...