ஊட்டி மலை ரயிலுக்கு முன்பதிவு இல்லாத பெட்டிகள் அட்டவணை வெளியீடு

ஊட்டி மலை ரயிலுக்கு வரும் 1ம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகள் மாற்றப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


நீலகிரி: குன்னுார் ஊட்டி மலை ரயிலில், இரு பெட்டிகள் வரும், 1ம் தேதியில் இருந்து முன்பதிவில்லாத கட்டணமாக மாற்றப்படும் அட்டவணையை சேலம் கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 1ம் தேதியில் இருந்து, மாலை, 5.30 மணிக்கு இயங்கும், ஊட்டி-குன்னூர் ரயில் (எண்: 06140); 4ம் தேதியில் இருந்து காலை 7:45 மணிக்கு இயங்கும் குன்னூர்-ஊட்டி ரயில் (06141); பகல், 12:15 மணிக்கு இயங்கும் ஊட்டி-குன்னூர் ரயில் (016142); மாலை 4:00 மணிக்கு இயங்கும் குன்னூர்- ஊட்டி ரயில் (016138); காலை, 9:15 மணிக்கு இயக்கும் ஊட்டி - குன்னூர் ரயில் (016143); பகல், 12:35 மணிக்கு, குன்னூர்- ஊட்டி ரயில் (016139) ஆகியவற்றில் முன்பதிவில்லாத இரு பெட்டிகள் மாற்றப்படுகின்றன.

வரும் 16ம் தேதியில் இருந்து, காலை, 7:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரயில் (06136) குன்னூருக்கு ஒரு பெட்டியும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மற்றொரு பெட்டியும் இருக்கும். பிற்பகல் 2:00 மணிக்கு, ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் ரயில் (06137) குன்னூருக்கு, இரு பெட்டிகளும், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஒரு பெட்டியும் இயங்கும், இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...