கோவையில் 28 வது தடுப்பூசி முகாம் - 1515 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்க இலக்கு!

கோவையில் வரும் 30 ஆம் தேதி 1515 இடங்களில் தடுப்பூசிகள் செலுத்த மையங்கள் அமைத்து தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.


கோவை: கோவையில் 28வது கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும், 1515 இடங்களில் தடுப்பூசி வழங்க தடுப்பூசி மையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், கடந்த 25ம் தேதி முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆய்வு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் வருகிற சனிக்கிழமை (30ம் தேதி) மாபெரும் கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை 1515 இடங்களில் தடுப்பூசிகள் வழங்க தடுப்பூசி மையங்கள் அமைத்து தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, கிராமப் பகுதிகளில் 1081 முகாம்கள், மாநகராட்சி பகுதிகளில் 325 முகாம்கள், நகராட்சி பகுதிகளில் 109 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், கோவை மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 27,78,885 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 24,97,706 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் 15-18 வயது உடையவர்கள் 1,33,195 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 1,19,544 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், 12-14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 69,531 பேருக்கு முதல் தவணையும் 14,730 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 30ம் தேதி நடைபெற உள்ள தடுப்பூசி முகாமில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...