கோவை மாநகராட்சி சொத்து வரி உயர்வில் ஆட்சேபனையா? 30-நாளுக்குள் பொதுமக்கள் கருத்து கூறலாம்..!

சொத்து வரி குறித்து ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் என்றால் 30-நாட்களில் எழுத்துப்பூர்வமாக கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பலாம், இல்லை என்றால் [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.


கோவை: கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வால் ஏதேனும் ஆட்சேபனைஇருந்தால் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கோவை மாநகராட்சியின் சொத்துவரி அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அதில் ஏதும் ஆட்சேபனை இருந்தால் கடிதம் மூலமாக கோவை மாநகராட்சி ஆணையருக்கு தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

மாநகராட்சியில் உள்ள பகுதிகளை மேம்படுத்துவதற்காகவும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காகவும், பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சொத்து வரி என்பது உயர்த்தப்படுவது வழக்கத்தில் உள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது சொத்து வரி உயர்ந்துள்ளது. இதில் பலருக்கும் ஆட்சேபனைஉள்ளதால் இதனை குறித்து கோவை மாநகராட்சி ஆணையருக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் கடந்த 2008-ஆம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2018-ஆம் ஆண்டில் உயர்த்தப்பட வேண்டிய சொத்து வரி உயர்த்தப்படாத நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

சொத்து வரி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், சாலையோரங்களில் உள்ள கட்டிடங்களை ஒப்பிட்டு ஏ,பி,சி என்று பிரித்து அதற்கேற்ப சொத்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கோவை மாநகராட்சி சட்டம் 1981-பிரிவு 119-கீழ் பொதுமக்கள் ஆலோசனை மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் சொத்துவரி பொது சீராய்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சொத்து வரி குறித்து பொதுமக்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் என்றால் கோவை மாநகராட்சி ஆணையருக்கு 30-நாட்களில் எழுத்துப்பூர்வமாக கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பலாம், இல்லை என்றால் [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...