கோவை வழித்தடத்தில் கோரக்பூர் - எர்ணாகுளம் இடையே 30-ம் தேதியிலிருந்து சிறப்பு ரயில்..!

கோவை, திருப்பூர் வழியாக கோரக்பூர் - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.



கோவை: கோரக்பூா் - எா்ணாகுளம் இடையே 30-ம் தேதியிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'மே, ஜூன் மாதங்களில் பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர்- கேரள மாநிலம் எர்ணாகுளம் இடையிலான சிறப்பு ரயில் (எண்:05303), வரும் 30-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை சனிக்கிழமைகளில், காலை 8.30 மணிக்கு கோரக்பூரிலிருந்து புறப்பட்டு, திங்கட்கிழமைகளில் நள்ளிரவு 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

இதேபோல, எர்ணாகுளம்-கோரக்பூர் இடையிலான சிறப்பு ரயில் (எண்:05304), வரும் மே 2-ம் தேதி முதல் ஜூன் 27-ம் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு, வியாழக்கிழமைகளில் காலை 8.35 மணிக்கு கோரக்பூர் சென்றடையும்.

இந்த ரயில்கள் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் ரயில்நிலையங்களில் நின்று செல்லும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...