கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.. வீடு கட்டுவதற்கு நிதியுதவி வேணுமா? உடனே அப்ளை பண்ணுங்க..!

கட்டுமான தொழிலாளர்கள் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு www.tnuwwb.tn.gov.in என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



கோவை: கட்டுமான தொழிலாளர்கள் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,

"2021-22 தமிழ்நாடு சட்டமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், வீட்டு வசதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோரும் விண்ணப்பத்துடன் தொழிலாளியின் நல வாரிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பட்டா, வங்கிக் கணக்கு புத்தகம், கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளரால் வழங்கப்பட்ட வருமான வரி சான்றிதழ், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் புகைப்படம், ஆகியவற்றை www.tnuwwb.tn.gov.in என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கு "பயனாளி தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்று குறைந்தபட்சம் 3-ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நாளன்று புதுப்பித்தல் நடப்பில் இருக்க வேண்டும். பயனாளி அல்லது அவரது குடும்பத்தினருக்கு (மனைவி, மணமாகாத குழந்தைக்கு) வேறு எந்த இடத்திலும் கான்கிரீட் வீடு சொந்தமாக இருக்க கூடாது.

பயனாளியின் ஆண்டு வருமானம் 3-லட்சத்துக்கும் கீழ் இருக்க வேண்டும். சொந்தமாக வீடு கட்ட விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 28-சதுர மீட்டர் அல்லது 300-அடி மனையை சொந்தமாக வைத்திருக்க வேண்டும். பயனாளியின் பெயரில் பட்டா அல்லது தொழிலாளி பெயருடன் குடும்ப உறுப்பினர் பெயர் சேர்ந்த கூட்டு பட்டா இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெறும் முறையில் பயனாளிக்கு தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள இரண்டு வகைகளிலும் வழங்கப்படும் உதவித்தொகை 4 லட்சம் ரூபாய் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் வீட்டு வசதி திட்ட உதவித் தொகையாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கு சொந்தமாக வீடு கட்டுதல் அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெறுதல் ஆகிய ஏதேனும் ஒரு வழிமுறையை தன் விருப்பத்தின் கீழ் தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...