கோவையில் மே 13-ம் தேதி ஓய்வூதியர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம்..!

ஆட்சியர் அலுவலகத்தில் மே 13-ம் தேதி ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளதால், ஓய்வு பெற்ற அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிந்தோர் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம் மே 13-ம் தேதி நடைபெற உள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மே 13-ம் தேதி ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளதால் ஓய்வு பெற்ற அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிந்தோர் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,

கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணி புரிந்த ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் கிடைக்கப் பெறாமல் இருப்பின் அதை பற்றிய விவரங்கள், பணியாற்றிய துறை, மற்றும் எந்த அலுவலர் மூலம் குறைதீர்க்கச் செய்யப்பட வேண்டும் என்ற விவரங்களை ஓய்வூதியர் குறைதீர்ப்பு மாதிரி படிவத்தில் பூர்த்தி செய்து இரட்டை பிரதிகளில் மாவட்ட ஆட்சியருக்கு மே 5ம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மே 13-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஓய்வூதிய குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...