இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் காட்பாடி - சென்னை சென்ட்ரல் இடையே ரத்து..!

கோவை - சென்னை சென்டரல் இடையே இயக்கப்படும் (வண்டி எண்:12680), இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி - சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுகிறது.


கோவை: இன்ஜி., பணிகளால், கோவை - சென்னை இடையேயான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் காட்பாடி, சென்னை சென்ட்ரல் இடையே, ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் ரயில்வே பாதையில் இன்ஜி., பணிகள் நடந்து வருகின்றன.

இதையடுத்து, கோவை - சென்னை சென்டரல் இடையே இயக்கப்படும் (வண்டி எண்:12680), இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி - சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுகிறது. ஏப்., 19, 20, 26, 27 ஆகிய தேதிகளில், கோவையிலிருந்து காலை, 6:15 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், இந்த ரயில் பாதையில் ரத்து செய்யப்படுகிறது.

ரயில், கோவையிலிருந்து காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல், மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் - கோவை இடையே இயக்கப்படும் ரயில் (வண்டி எண்:12679) காட்பாடியில் இருந்து புறப்படும்.

காட்பாடியிலிருந்து, ஏப்., 19, 20, 26, 27 ஆகிய தேதிகளில் மாலை, 4:20 மணிக்கு புறப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...