நீலகிரியில் கோடை விழா: வரும் 16 ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்

நீலகிரி மாவட்டத்தில் விரைவில் கோடை விழா துவங்க உள்ள நிலையில், வாகன நெரிசலை கட்டுப்படுத்த வரும் 16 ஆம் தேதி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


கோவை: நீலகிரி மாவட்டத்தில் விரைவில் கோடை விழா துவங்க உள்ள நிலையில், வாகன நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி ஆட்சியர் அம்ரித் தலைமையில், எஸ்.பி., ஆசிஷ் ராவத், வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் முன்னிலையில், லாரி உரிமையாளர்கள் சங்கம், மேக்சி கேப் ஓட்டுநர் சங்கம், மினி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர், ஊட்டிக்கு வரும் கனரக வாகனங்கள் இரவு, 10:00 முதல் காலை, 6:00 மணி வரை மட்டும் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

அதேபோல, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வரும் இதர வாகனங்கள் குன்னூர் வழியாகவும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும் இயக்கப்படும்.

மேலும், உள்ளூர் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் அனைத்தும் வரும் ஏப்., 16 முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...