'தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி…'- ஏப்ரல் 14-முதல் 4-நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை..!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு, சனிக்கிழமையும் வேலை நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது, தொடர் விடுமுறையால் வரும் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: பள்ளிகளுக்கு, நாளை மறுநாள் முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பு:-

வரும் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு; 15-ம் தேதி புனித வெள்ளி என, இரண்டு நாட்களுக்கும் அரசு விடுமுறை. இதைத் தொடர்ந்து வரும் 16-ம் தேதி சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, விடுமுறை நாட்கள் முடிந்து, வரும் 18-ம் தேதி பள்ளிகள் மீண்டும் வழக்கம் போல் செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு, சனிக்கிழமையும் வேலை நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது, தொடர் விடுமுறையால் வரும் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...