மூன்று சுகாதார ஆய்வாளர்கள் கோவை மாநகராட்சியில் இடமாற்றம்..!

கோவை மாநகராட்சியில் நிர்வாக நலன் கருதியே தற்போது இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


கோவை: மூன்று சுகாதார ஆய்வாளர்கள் கோவை மாநகராட்சியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியின் சுகாதார ஆய்வாளர்கள் மூவர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேறுபகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியில் 22-சுகாதார ஆய்வாளர்கள் பணியாற்றுகின்றனர் பகுதிகளுக்கு ஏற்ப அவர்களுக்கு வார்டுகள் பிரித்து தரப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தில் உள்ள 5, 6, 7, 8, 9 ஆகிய வார்டு எண்களைக் கவனித்து வந்த சுகாதார ஆய்வாளர் தனபாலன் தற்போது மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 81, 82, 83, 84 வார்டு எண்களைக் கவனிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தனபாலன் கவனித்து வந்த மேற்கு மண்டலத்திற்கு தற்பொழுது சுகாதார ஆய்வாளர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டலத்தில் சந்திரசேகரன் கவனித்து வந்த 10, 11, 12, 22, 23, 24 வார்டுகளை தற்போது மத்திய மண்டலத்தில் பணியாற்றிய சுகாதார ஆய்வாளராக சலேத் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியில் நிர்வாக நலன் கருதியே தற்போது இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...