ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு நல்வாய்ப்பு: அன்னூரில்‌ சுய வேலைவாய்ப்பு கடன்‌ திட்ட விழிப்புணர்வு முகாம்.!!

புதிய தொழில்‌ துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில்‌ கலந்து கொண்டு பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர்‌ அழைப்பு விடுத்துள்ளார்‌.


கோவை: ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக சுய வேலைவாய்ப்பு கடன்‌ திட்ட விழிப்புணர்வு முகாம்‌ மாவட்ட தொழில்‌ மையம்‌ மூலம்‌ அன்னூரில்‌ நடத்தப்படுகிறது.

கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ சுய வேலைவாய்ப்பை உருவாக்கும்‌ பொருட்டு மாவட்ட தொழில்‌ மையம்‌ மூலம்‌ வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டம்‌ (யூ.ஒய்‌.ஈ.ஜி.பி), புதிய தொழில்‌ முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ நிறுவன மேம்பாட்டுத்‌ திட்டம்‌ (நீட்ஸ்‌) மற்றும்‌ பிரதமரியின்‌ வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டம்‌ (பி.எம்‌.இ.ஜி.பி) ஆகிய திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்கள்‌ தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பிரத்யேகமாக ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு 18.03.2022 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல்‌ 2.30 மணியளவில்‌ அன்னூரில்‌ ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்‌ நடைபெறவுள்ளது.

தகுதி வாய்ந்த தொழில்‌ முனைவோர்கள்‌ புகைப்படம்‌, மாற்றுச்சான்றிதழ்‌, சாதிச்சான்றிதழ்‌, குடும்ப அட்டை, ஆதார்‌ அட்டை விலைப்பட்டியல்‌ மற்றும்‌ திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன்‌ வரும்பட்சத்தில்‌ இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பம்‌ பதிவேற்றப்பட்டு கடன்‌ திட்ட விண்ணப்பம்‌ உடனடியாக வங்கிக்குப் பரிந்துரை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

ஆகவே, புதிய தொழில்‌ துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில்‌ கலந்து கொண்டு பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சமீரன்‌, அழைப்பு விடுத்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...