'ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்'- சேலம் கோட்டத்தில் 16-ரயில்களில் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு

இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லா பெட்டிகளை பழையபடி இணைத்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, 16-ரயில்களில் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு.


கோவை: சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட 16-ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா முதல் அலை பரவலைத் தடுக்கும் வகையில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் குறையக் குறைய எக்ஸ்பிரஸ் ரயில்கள் படிப்படியாக மீண்டும் இயங்கத் தொடங்கின. கூட்டத்தைத் தவிர்க்க அதில், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது.

பெரும்பாலான ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டது. மேலும், முன்பதிவு இல்லாமல் பெட்டிகளில் பயணிக்க முடியாத நிலையும் இருந்தது. இந்நிலையில், கொரோனாவுக்கு முந்தைய கட்டணத்துடன் ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லா பெட்டிகளை பழையபடி இணைத்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தற்போது குறிப்பிட்ட பெட்டிகளை முன்பதிவு இல்லா பெட்டிகளாக மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறும்போது,

சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட 16-ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பயணிகளின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். அவர்கள் முன்பதிவுவை ரத்து செய்து கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும் என்றனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...