வண்டி வேணுமா? கோவையில் நீண்ட நாள்களாக உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏல அறிவிப்பு

வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாமல் உள்ள வாகனங்கள் மாா்ச் 29-ஆம் தேதி திறந்தவெளி ஏலம் விடப்படவுள்ளதாகக் கோவை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் உரிமை கோரப்படாத 72 வாகனங்கள், கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வரும், மாா்ச் 29-ஆம் தேதி ஏலத்தில் விடப்பட உள்ளன.

இது தொடர்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-

கோவையில் வரி செலுத்தாத, விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காகப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டாா் வாகன ஆய்வாளர்களால் பறிமுதல் செய்யப்பட்ட 72-வாகனங்கள் கோவை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நீண்ட நாள்களாக உரிமை கோரப்படாமல் உள்ள இந்த வாகனங்கள் போக்குவரத்து ஆணையர் சுற்றறிக்கையின்படி திறந்தவெளி பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் மாா்ச் 16-முதல் 24-ஆம் தேதி வரை கோவை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.500-செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பிணை முறித்தொகை ரூ.10-ஆயிரத்துக்கான வங்கி வரைவோலை இணைத்து மாா்ச் 25-ஆம் தேதி மாலை 5-மணிக்குள் கோவை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

நடப்பு ஜி.எஸ்.டி. கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் விடப்படும் வாகனங்களை மாா்ச் 16-முதல் 25-ஆம் தேதி வரை அலுவலக நாள்களில் பார்வையிடலாம்.

துடியலூரிலுள்ள கோவை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மாா்ச் 29-ஆம் தேதி காலை 11- மணிக்குத் திறந்தவெளி பொது ஏலம் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...