கோவை காளப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நாளை 'கலைஞரின் வரும் முன் காப்போம்' திட்டத்தின் 2வது முகாம்..!

இந்த இலவச மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுத்தப்படும்‌ என தகவல்.


கோவை: கோவை காளப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் "கலைஞரின் வரும் முன் காப்போம்" திட்டத்தின் 2வது முகாம் நடைபெற உள்ளது.

“கலைஞரின்‌ வரும்‌ முன்‌ காப்போம்‌” 2வது முகாம்‌ கோவை மாநகராட்சி காளப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில்‌ 06.03.2022 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., தகவல்‌ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின்‌ மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை, ஏழை எளியோர்க்கான இலவச பன்முனை மருத்துவப்‌ பரிசோதனை மற்றும்‌ சிகிச்சைத்‌ திட்டமான கலைஞரின்‌ வரும்‌ முன்‌ காப்போம்‌ என்ற திட்டத்தை மீண்டும்‌ புதுப்பொலிவுடன்‌ செயல்படுத்த முனைந்துள்ளது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌, மாவட்டங்களிலும்‌ ஒரு வட்டாரத்திற்கு மூன்று முகாம்‌ வீதம், மொத்தம்‌ ஒரு வருடத்திற்கு கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ 4 முகாம்கள்‌ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம்‌ குறிப்பிட்ட நாட்களில்‌ காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுத்தப்படும்‌.

இதுவரை, கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ ஒரு முகாம்‌ நடத்தப்பட்டுள்ளது. தற்போது 2வது முகாம்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி காளப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில்‌ 06.03.2022 ௮ன்று காலை 9.00 மணிக்கு துவங்கவுள்ளது.

மக்களிடையே நோய்கள்‌ வருமுன்‌ தடுக்கும்‌ அணுகுமுறையை ஏற்படுத்திடவும்‌, நல்ல ஆரோக்கியத்துடன்‌ வாழ வேண்டும்‌ எனும்‌ விழிப்புணர்வை ஏற்படுத்திடவும்‌, நோய்த்‌ தடுப்பு முறைகளை எளிய வகையில்‌ விளங்கவைத்து பின்பற்றச்‌ செய்திடவும்‌, முன்னாள்‌ முதலமைச்சர்‌ டாக்டர்‌. கலைஞர்‌ கருணாநிதி 30.12.2006 அன்று பூந்தமல்லி நகராட்சியில்‌ அறிஞர்‌ அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்‌ தொடங்கி வைத்தார்கள்‌.

இந்த திட்டத்தின்கீழ்‌ பொதுமக்களுக்கு பொது மருத்துவம்‌, பொது அறுவை சிகிச்சை மருத்துவம்‌, குழந்தைகள்‌ நல மருத்துவம்‌, மகப்பேறு மற்றும்‌ பெண்கள்‌ நல மருத்துவம்‌, கண்‌ மருத்துவம்‌, காது - மூக்கு - தொண்டை மருத்துவம்‌ இது போன்ற பத்து வகையான சிறப்பு மருத்துவர்களால்‌ நோயைக் கண்டறிந்து அதற்கான முதல்‌ சிகிச்சைகளும்‌ செய்யப்படும்‌.

இலவசமாக இரத்தத்தில்‌ சர்க்கரையின்‌ அளவு, கொழுப்புச்சத்தின்‌ அளவு, ஹீமொகுளோபின்‌ அளவு உட்பட இருபத்தி ஐந்து இரத்த பரிசோதனைகளும்‌ மற்றும்‌ இதய மின்‌ துடிப்பு பதிவு (ECG), அல்ட்ராசோனோகிராம்‌ (USG ) உட்பட ஐந்து இதரப்‌ பரிசோதனைகளும்‌ செய்யப்படும்‌.

மருத்துவ பரிசோதனைக்குப்‌ பின்னர்‌ முகாமிலேயே முதல்‌ சிகிச்சையும்‌, இலவசமாக மருந்துகளும்‌ வழங்கப்படும்‌. மேற்பரிந்துரை/ தொடர்‌ சிகிச்சை தேவைப்படின்‌, நோயின்‌ தன்மையைப்‌ பொறுத்து முதலமைச்சரின்‌ விரிவான காப்பீட்டுத் திட்டம்‌ மூலமாக அரசு மற்றும்‌ தனியார்‌ மருத்துவமனைகளுக்கு மக்கள்‌ பரிந்துரை செய்யப்படுவர்‌.

மேலும்‌, இம்முகாம்களில்‌ பொதுமக்களுக்கு பயனளிக்கும்‌ வகையில்‌ கோவிட்‌ தடுப்பூசிகள்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்‌ வழங்கப்படும்‌. முகாமின்‌ போது சித்த மருத்துவம்‌ உள்ளிட்ட பல்துறை விளக்கக் கண்காட்சி மற்றும்‌ வழிகாட்டுதல்‌ மையம்‌ ஆகியவை செயல்படும்‌.

இம்முகாம்கள்‌ மூலம்‌ மக்கள்‌ தங்கள்‌ வசிக்கும்‌ பகுதிக்கு அருகாமையிலேயே நோய்க்கான சிகிச்சையும்‌ ஆலோசனையும்‌ ஆரம்‌ப நிலையிலே பெற ஏதுவாகும்‌. பொது மக்கள்‌ இந்த வாய்ப்பினை பயன்படுத்தி “வரும்‌ முன்‌” காத்து நோயற்று வாழ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...