நாளை 23-வது மெகா தடுப்பூசி முகாம்: மாவட்ட ஆட்சியர் சமீரன் தகவல்

கோவையில் 23-வது கோவிட்-19 மெகா தடுப்பூசி முகாம் (05-ம் தேதி) சனிக்கிழமை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் வருகின்ற சனிக்கிழமை 23-வது மெகா தடுப்பூசி முகாம் நடைப்பெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் வருகின்ற சனிக்கிழமை 23-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், வருகின்ற சனிக்கிழமை கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 477-முகாம்களும், மாநகராட்சி பகுதியில் 226- முகாம்களும் என மொத்தம் 703-முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை மாவட்டத்தில் தற்போது வரை 99.1-சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் 86.8- சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளதாகவும், 15-18 வயதிற்குட்டவர்களில் 1,29,600-பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் 60-வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் 43,487-பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...