மாநகராட்சி வரி வசூல்‌ மையங்கள்‌ 31.03.2022 வரை ஞாயிற்றுக்கிழமைகளில்‌ செயல்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தகவல்‌.!

பொதுமக்களின்‌ வசதிக்காக நடப்பு மார்ச்‌ 2022 மாதத்தின்‌ 06.03.2022, 13.03.2022, 20.03.2022 மற்றும்‌ 27.03.2022 ஆகிய ஞாயிற்றுக்‌கிழமைகளிலும்‌ மாநகராட்சியின்‌ அனைத்து வரி வசூல்‌ மையங்களும்‌ வழக்கம்‌ போல்‌ செயல்படும்‌.


கோவை: மாநகராட்சி வரி வசூல்‌ மையங்கள்‌ 31.03.2022 வரை ஞாயிற்றுக்கிழமைகளில்‌ செயல்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.‌

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்கு நடப்பு 2021-22-ம்‌ நிதியாண்டின்‌ இரண்டாம்‌ அரையாண்டு வரையிலான காலத்திற்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர்‌ கட்டணம்‌, தொழில்வரி, காலியிட வரி ஆகியவற்றைப் பொதுமக்கள்‌ உடனடியாக செலுத்த ஏதுவாக மாநகராட்சி வரி வசூல்‌ மையங்கள்‌ தினசரி காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட்டு வருகின்றன.

பொதுமக்களின்‌ வசதிக்காக நடப்பு மார்ச்‌ 2022 மாதத்தின்‌ 06.03.2022, 13.03.2022, 20.03.2022 மற்றும்‌ 27.03.2022 ஆகிய ஞாயிற்றுக்‌கிழமைகளிலும்‌ மாநகராட்சியின்‌ அனைத்து வரி வசூல்‌ மையங்களும்‌ வழக்கம்‌ போல்‌ செயல்படும்‌.

எனவே, மாநகராட்சியின்‌ 5-மண்டலங்களிலும்‌ சொத்துவரி, குடிநீர்‌ கட்டணம்‌ மற்றும்‌ இதர வரியினங்களை நிலுவை வைத்துள்ள குடியிருப்பு மற்றும்‌ வணிக வளாக உரிமையாளர்கள்‌ இந்த வசதியினை முழுமையாகப் பயன்படுத்தி நிலுவைத் தொகைகளை விடுதலின்றி செலுத்தி மாநகராட்சியின்‌ வளாச்சிப்‌ பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகின்றனர்‌.

மேலும்‌, வரி/கட்டணத்‌ தொகைகளை கிரெடிட்‌ கார்டு, டெபிட்‌ கார்டு, டெபிட்‌ கார்டு ஏ.டி.எம்‌ பின்‌ மற்றும்‌ நெட்‌ பேங்கிங்‌ ஆகியவற்றில்‌ தங்களுக்கு விருப்பமான கட்டண முறையினை‌ தேர்ந்தெடுத்து, tnurbanepay.tn.gov.in என்கின்ற நகராட்சி நிர்வாக இணையதள முகவரி வாயிலாகச் செலுத்தலாம்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...