கோவை - லோக்மான்ய திலக், ராஜ்கோட் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு..!

ஆந்திர மாநிலம், மாலுகுா் ரயில் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மாற்றுப்பாதையில் ரயில்கள் இயக்கம்.


கோவை: கோவை - லோக்மான்ய திலக் மற்றும் கோவை - ராஜ்கோட் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆந்திர மாநிலம், மாலுகுா் ரயில் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் லோகமான்ய திலக் - கோவை விரைவு ரயில் (எண்:11013) மார்ச் 3 மற்றும் 16 ஆகிய தேதிகளில் குண்டக்கல், தா்மாவரம், பெங்களூரு, ஒசூா், தருமபுரி மற்றும் சேலம் ஆகிய வழித்தடங்களுக்குப் பதிலாக கடப்பா, ரேணிகுண்டா, ஜோலாா்பேட்டை, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும்.

இதன் காரணமாக, அனந்தப்பூா், சத்ய சாய் பிரசாந்தி நிலையம், இந்துப்பூா், கௌரிபிதனூா், பெங்களூரு கண்டோன்மென்ட், ஒசூா், தருமபுரி ஆகிய இடங்களில் ரயில் நிற்பது தவிர்க்கப்படும்.

கோவை - லோகமான்ய திலக் விரைவு ரயில் (எண்: 11014) மாா்ச் 4, 17 ஆகிய தேதிகளில் சேலம், தருமபுரி, ஒசூா், பெங்களூரு, தா்மாவரம், குண்டக்கல் ஆகிய வழித்தடங்களுக்குப் பதிலாக, சேலம், ஜோலாா்பேட்டை, ரேணிகுண்டா, கடப்பா வழியாக இயக்கப்படும்.

இதன் காரணமாக, இந்த ரயில் தருமபுரி, ஒசூா், பெங்களூரு கண்டோன்மென்ட், கௌரிபிதனூா், இந்துப்பூா், சத்ய சாய் பிரசாந்தி நிலையம் உள்ளிட்ட நிலையங்களில் நிறுத்துவது தவிர்க்கப்படும்.

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் இருந்து கோவைக்கு ஈரோடு, சேலம், திருப்பத்தூா் வழியாக செல்லும் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 16613) மார்ச் 4ஆம் தேதி, வழக்கமான வழித்தடமான திருப்பத்தூா், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், தா்மாவரம், குண்டக்கல் வழித்தடத்துக்கு பதிலாக, ஜோலாா்பேட்டை, ரேணிகுண்டா, கடப்பா வழியாக இயக்கப்படும்.

இதன் காரணமாக, இந்த ரயில் இந்துப்பூா், அனந்தப்பூா், யெலஹங்கா ஆகிய நிலையங்களில் நிற்பது தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...