மகா சிவராத்திரியையொட்டி கொரோனா பாதித்தவர்கள் மலை ஏற தடை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்குக் கொரானா பாதித்தவர்கள், குழந்தைகள், வயதானவர்கள் உடல் நலம் குன்றியவர்கள் ஆகியோர் மலை ஏறுவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.



கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்டு, கோவில்களுக்கு கொரோனா பாதித்தவர்கள் வருவதைத் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளிங்கிரி திருக்கோவில், பட்டீஸ்வரர் திருக்கோவில், கோட்டை ஈஸ்வரர் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்காகச் சிறப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தற்போது நிலவி வரும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், ஏற்கனவே கொரோனா பாதித்தவர்கள் குழந்தைகள் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் ஆகியோர் மலை ஏறுவதைத் தவிர்க்குமாறும், பொதுமக்கள் அரசால் விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, வழிபாட்டுத் தலங்களில் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்து முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைப் பின்பற்றி தரிசனம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...