உக்ரைனில் உள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் உள்ள கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: உக்ரைனில் உள்ள கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் உள்ள கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், உக்ரைனில் உள்ளவர்களின் உறவினர்கள், "அங்கு வசிப்பவரின் பெயர், PASSPORT நம்பர், இருப்பிட முகவரி(உக்ரைன்), விபரங்கள், தமிழ்நாட்டில் வசிப்பிட முகவரி, தமிழ்நாட்டின் அலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, உறவினர் மற்றும் அலைப்பேசி எண்" ஆகியவற்றை நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ அல்லது [email protected] அல்லது [email protected] ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் இதை தவிர 0422- 2301114 என்ற தொலைப்பேசியில் தொடர்பு கொண்டும் தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...