கோவையில் நாளை 1,569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்.

நாளை (27.02.22) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்.


கோவை: தமிழகத்தில் நாளை (27.02.22) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவல், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஜனவரி 23ம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், வரும் 27ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் வரும் 27ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும். மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சுகாதார மையங்கள், பள்ளிகள், இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உட்பட 43,051 இடங்களில் போலியோ சிறப்பு முகாம் நடைபெறும்.

இந்த முகாம்களில், 5 வயதிற்குட்பட்ட 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாளில் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.

இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோயை ஒழிப்பதற்காக, ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால், கடந்த மூன்றாண்டுகளாக, ஆண்டுக்கு ஒரு தவணை மட்டுமே போடப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...