கோவையில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு காய்கறி மற்றும் பழவகை சாகுபடி செய்ய பயிற்சி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

மேலும், இது தொடர்பான விபரங்கள் அறிய 0422-2240111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


கோவை: கோவையில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை வாயிலாக, காய்கறி மற்றும் பழவகை சாகுபடி செய்ய பயிற்சி வழங்கப்படுகிறது.

இது தொடா்பாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை 'தாட்கோ' வாயிலாக, ஆதிதிராவிட விவசாயிகளுக்கு காய்கறி மற்றும் பழவகை சாகுபடி செய்ய எஸ்.சி., 70 நபர்கள், எஸ்.டி., 55 நபர்களுக்கு, இரண்டு நாட்கள் பயிற்சியும், வனத்துறை வழியாக வேளாண் காடுகள் மற்றும் நர்சரி உருவாக்கி விற்பனை செய்ய எஸ்.சி., 8 நபர்கள், எஸ்.டி., 40 நபர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

வேளாண் பொறியியல் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் வேளாண் பொறியியல் துறை பழுது நீக்கம் செய்ய, எஸ்.சி., 80 நபர்கள், எஸ்.டி., 50 நபர்களுக்கு மூன்று நாள் பயிற்சியும் நடத்த உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொள்ள பெயர், முகவரி, ஆதார் எண், மொபைல்போன் எண் குறிப்பிட்டு விண்ணப்பத்துடன் ஜாதி சான்றிதழ் நகல் இணைத்து, நேரில் அல்லது தபால் மூலம் "மாவட்ட மேலாளர், தாட்கோ, டாக்டர் பாலசுந்தரம் ரோடு (மகளிர் பாலிடெக்னிக் பின்புறம்) கோவை -641018" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், [email protected] என்ற இ-மெயில் முகவரியிலும் அனுப்பி வைக்கலாம். ஏற்கனவே தாட்கோ வாயிலாக, துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்ற பயனாளிகளும் இப்பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம்.

இது தொடர்பான விபரங்கள் அறிய, 0422-2240111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...