கோவை மாவட்ட காவல்துறை அறிவிப்பு: பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு..!

காரமடை தேரோட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட மாற்று வழி நடவடிக்கை நாளை 17.02.22 ம் தேதி மதியம் 02.00 மணி முதல் இரவு 10.00 வரை அமலில் இருக்கும் என்பதைக் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: காரமடை தேரோட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட மாற்று வழி நடவடிக்கை நாளை 17.02.22 ம் தேதி மதியம் 02.00 மணி முதல் இரவு 10.00 வரை அமலில் இருக்கும் என்பதைக் காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரமடை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோவில் தேரோட்டம் நாளை 17.02.2022 ம் தேதி மாலை 04.00 மணிக்கு துவங்கி இரவு 09.00 மணிக்குக் கோவில் நிலையை வந்தடையும். திருக்கோவில் தேரோட்ட விழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டு கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வாகனங்கள் பெட்டதபுரம் வழியாக திம்மம்பாளையம், டீச்சர்ஸ் காலனி, காந்தி நகர் வழியாக மேட்டுப்பாளையம் செல்லுமாறும், ஊட்டியிலிருந்து கோவை செல்லும் வாகனங்கள் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு- தென்திருப்பதி நால் ரோடு வழியாக மத்தம்பாளையம்- சென்று பெரிய நாயக்கன்பாளையம் வழியாகக் கோவை செல்லுமாறும் காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட மாற்று வழி நடவடிக்கை நாளை 17.02.22 ம் தேதி மதியம் 02.00 மணி முதல் இரவு 10.00 வரை அமலில் இருக்கும் என்பதைக் காவல் துறை சார்பாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் COVID 19 கொரோனா தொற்று பாதிப்பு அபாயம் உள்ளதால் தடுப்பு நடவடிக்கை காரணமாக உள்ளூர் பக்தர்கள் மட்டும் திருக்கோவில் தேர் திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நோய்த்தொற்று அபாயத்தின் காரணமாகவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டும் வெளியூர் மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு கோவை மாவட்ட காவல்துறை மற்றும் திருக்கோவில் சார்பாகப் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...