கோவை வழியாக செல்லும் கொச்சுவேலி - யஷ்வந்த்பூா் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து கோவை வழியாக கர்நாடகம் மாநிலம், யஷ்வந்த்பூருக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து கோவை வழியாக கர்நாடகம் மாநிலம், யஷ்வந்த்பூருக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-

கொச்சுவேலி - யஷ்வந்த்பூா் வாராந்திர ரயில் (எண்: 22677) வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதிமுதல் 3 குளிர்சாதனப் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

அதேபோல, யஷ்வந்த்பூா்-கொச்சுவேலி வாராந்திர ரயில் (எண்: 22678) 18 ஆம் தேதி முதல் 3 குளிர்சாதனப் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது.

இந்த ரயிலில், ஒரு குளிர்சாதன வசதி முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன வசதி இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்பட 15 பெட்டிகள் உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...