கோவை மாநகராட்சியில்‌ நாளை மாலை 6 மணிக்கு மேல்‌ பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது - தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ உத்தரவு..!

தேர்தல்‌ பிரச்சார பொதுக்கூட்டங்கள்‌, ஊர்வலங்கள்‌ மற்றும்‌ ஏனைய பிரச்சாரங்கள்‌ அனைத்தையும்‌ நாளை மாலை 6 மணிக்கு மேல்‌ மேற்கொள்ளக்கூடாது என மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்௧ரா இ.ஆ.ப., உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ தேர்தல்‌ பிரச்சார பொதுக்கூட்டங்கள்‌, ஊர்வலங்கள்‌ மற்றும்‌ ஏனைய பிரச்சாரங்கள்‌ அனைத்தையும்‌ நாளை மாலை 6 மணிக்கு மேல்‌ மேற்கொள்ளக்கூடாது என தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்௧ரா இ.ஆ.ப., உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியில்‌ 100 வார்டுகளிலும்‌ 19.02.2022 (சனிக்கிழமை) அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தற்போது தேர்தல்‌ நடத்தை விதிகளின்படி, அரசியல்‌ கட்சிகளின்‌ தேர்தல்‌ பொதுக்கூட்டங்கள்‌, ஊர்வலங்கள்‌ மற்றும்‌ ஏனைய பிரச்சாரங்கள்‌ அனைத்தையும்‌ வாக்குப்பதிவு முடிவுறும்‌ நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும்‌.

அதன்படி, தேர்தல்‌ பிரச்சார பொதுக்கூட்டங்கள்‌, ஊர்வலங்கள்‌ மற்றும்‌ ஏனைய பிரச்சாரங்கள்‌ அனைத்தையும்‌ 17.02.2022 (வியாழக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு மேல்‌ மேற்கொள்ளக்கூடாது என்பதை அரசியல்‌ கட்சியினர்‌, வேட்பாளர்கள்‌ கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டுமென மாநகராட்சி உதவி ஆணையர்கள்‌, உதவி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்கள்‌ ஆகியோர்களுக்கு தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...