கோவை - திருப்பதி இடையிலான புதிய ரயில்‌ சேவை துவக்கம்..!

வாரம்தோறும்‌ திருப்பதியில்‌ சிறப்பு தரிசனம்‌ செய்ய ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அரசின்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும்‌ பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்‌ இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது.



கோவை: கோவை - திருப்பதி இடையிலான புதிய ரயில்‌ சேவையை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஐ.ஆர்‌.சி.டிசி (இந்திய அரசு பொதுத்துறை நிறுவனம்‌) இரயில்‌ மற்றும்‌ விமானம்‌ மூலம்‌ பல்வேறு சுற்றுலாக்கலை இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக வீடுகளில்‌ அடைந்து கிடந்த மக்கள்‌ மத்திய மற்றும்‌ மாநில அரசுகள்‌ மேற்கொண்ட ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளினால்‌ தங்கள்‌ அன்றாட வாழ்க்கையினைத்‌ தொடர ஆரம்பித்துள்ளனர்‌

இந்த நிலையில், கோவை.திருப்பதி இடையிலான புதிய ரயில்‌ சேவையை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. அதன்படி IRCTC (இந்திய அரசு பொதுத்துறை நிறுவனம்‌), வாரம்தோறும்‌ திருப்பதியில்‌ சிறப்பு தரிசனம்‌ செய்ய ஏற்பாடு செய்துள்ளது. மத்திய அரசின்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும்‌ பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்‌ இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது.

திருப்பதி சிறப்பு தரிசனம்‌:

ஐ.ஆர்‌.சி.டி.சி (இந்திய அரசு பொதுத்துறை நிறுவனம்‌) வாரம்தோறும்‌ இரயில்‌ மூலம்‌ திருப்பதி சென்று தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா கட்டணம் A/C இருக்கையில்‌ ஒருவருக்கு ரூ. 4,500/- முதலும்‌ சாதாரண இருக்கையில்‌ ரூ.3, 300/- முதலும்‌ துவங்குகிறது.

(வழித்தடம்‌: கோவை, திருப்பூர்‌, ஈரோடு. சேலம்‌, ஜோலார்பேட்டை, காட்பாடி)

இதில்‌ இரயில்‌ பயணக்‌ கட்டணம்‌, திருப்பதி சிறப்பு தரிசன கட்டணம்‌, சைவ உணவு கட்டணம்‌ (காலை மற்றும்‌ இரவு), சுற்றுலா வழிகாட்டி, A/C தங்கும்‌ வசதி, A/C பஸ்‌ கட்டணம்‌ ஆகியவை அடங்கும்‌. மத்திய / மாநில அரசு ஊழியர்கள்‌ LTC சலுகைகளை பெறலாம்‌.

விபரங்கள்‌ மற்றும்‌ முன்பதிவுகளை தெரிந்து கொள்ள:

இந்தியன்‌ இரயில்வே உணவு மற்றும்‌ சுற்றுலாக்‌ கழகம்‌

பகுதி அலுவலகம்‌, கோவை

209, மாருதி டவர்‌, அரசு மருத்துவமனை எதிரில்‌

கோவை - 641018

தொலைபேசி: 8287931965 / 9003140655 இணையதள முகவரி: www.irctctourism.com

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...