கோவையில் 10-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

கோவை மாநகர காவல் துறையில் 10-போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மாநகர காவல் துறையில் 10-போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதில் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறிதல் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த செந்தில்குமார், அதே காவல் நிலையத்தில் குற்றப்புலனாய்வு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

போத்தனூர் சிறப்பு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் அதே காவல் நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டராகவும், சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா அதே காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், ரத்தினபுரி தீவிர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி குற்றப்புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டராகவும், குனியமுத்தூர் போலீஸ் குற்றப்புலனாய்வு இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மாநகர சிறப்பு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், மேற்கு மண்டலத்தில் பதவி உயர்வு பெற்ற பாஸ்கரன் குனியமுத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், பதவி உயர்வு பெற்ற செல்வராஜ் மாநகர வெடிகுண்டு கண்டறிதல் பிரிவு இன்ஸ்பெக்டராகவும், பதவி உயர்வு பெற்ற கிருஷ்ணவேணி மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக கவிதா மாநகர நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றிய சாந்தி சைபர் கிரைம் மண்டல ஆய்வக இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...