தூர்வாரும்‌ பணிகள்‌ முடிவுற்ற பின்னர்‌ குடிநீர் விநியோகம்‌ மீண்டும்‌ துவங்கும்- மாநகராட்சி ஆணையாளர்‌

கோவை மாநகராட்சியின்‌ கவுண்டம்பாளையம்‌ மற்றும்‌ வடவள்ளி பகுதிகளில்‌ தூர்வாரும்‌ பணிகள்‌ முடிவுற்ற பின்னர்‌ குடிநீர் விநியோகம்‌ மீண்டும்‌ துவங்கும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியின்‌ கவுண்டம்பாளையம்‌ மற்றும்‌ வடவள்ளி பகுதிகளில்‌ தூர்வாரும்‌ பணிகள்‌ முடிவுற்ற பின்னர்‌ குடிநீர் விநியோகம்‌ மீண்டும்‌ துவங்கும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்தின்‌ மூலமாக குடிநீர் விநியோகம்‌ செய்யப்பட்டு வருகிறது.

கவுண்டம்பாளையம்‌, வடவள்ளி ஆகிய பகுதிகளுக்குட்பட்ட குடிநீர் சேகரிப்பு கிணற்றில்‌ இலைகள்‌, சருகுகள்‌ போன்ற குப்பைகள்‌ நிறைந்துள்ளதால்‌ அவற்றை தூர்வாரும்‌ பணிகள்‌ 27.01.2022 முதல்‌ 29.01.2022 வரை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்‌ காரணமாகக் கோவை மாநகராட்சியின்‌ கவுண்டம்பாளையம்‌ மற்றும்‌ வடவள்ளி பகுதிகளில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ பாதிக்கப்படும்‌. தூர்வாரும்‌ பணிகள்‌ முடிவுற்ற பின்னர்‌ குடிநீர் விநியோகம்‌ மீண்டும்‌ துவங்கும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...