நாங்க தடுப்பூசி போட்டாச்சு, அப்ப நீங்க... கோவையில் 19-வது மெகா தடுப்பூசி முகாம்.!!

ஓமைக்ரான்‌ வகை கோவிட்‌ நோய்த்‌ தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளத் தகுதியுடைய நபர்கள்‌ அனைவரும்‌ கட்டாயம்‌ தடுப்பூசி எடுத்துக்‌ கொள்ள மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்.


கோவை: தமிழக அரசு உத்தரவின்படி கோவிட்‌-19 19-வது மெகா தடுப்பூசி முகாம்‌ 22.01.2022 அன்று காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதியில்‌ 212 மையங்களில்‌ நடைபெறவுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ தெரிவிக்கையில்‌, “கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ 94% மேல்‌ முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொண்டுள்ளனர்‌. கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ 18 வயதிற்கு மேல்‌ 1,08,000 நபர்கள்‌ முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளாமல்‌ உள்ளனர்‌.

எனவே இந்த 19-வது மெகா கோவிட்‌ முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளுமாறும்‌, மேலும்‌, 2,13,000 நபர்கள்‌ இரண்டாம்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளத் தகுதியுடையவர்களாக உள்ளனர்‌. (கோவிஷீல்டூ முதல்‌ தவணை செலுத்தி 84 நாட்கள்‌ முடிவடைந்தவர்கள்‌ மற்றும்‌ கோவேக்சின்‌ 28 நாட்கள்‌ முடிவடைந்தவர்கள்‌) தடுப்பூசி இரண்டாம்‌ தவணை செலுத்தியவர்களுக்குத் தொற்று தீவிரமையாமல்‌ தடுக்கப்படுகிறது. மேலும்‌ 100 சதவீத பாதுகாப்பும்‌ கிடைக்கப்பெறுகிறது.

மேலும்‌, தியேட்டர்கள்‌, மால்கள்‌ மற்றும்‌ மக்கள்‌ அதிகமாகக் கூடும்‌ பொது இடங்களில்‌ முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்தி இரண்டாம்‌ தவணை செலுத்த நாட்கள்‌ முடிவடையாதவர்கள்‌ மற்றும்‌ இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள்‌ மட்டுமே பொது இடங்களில்‌ அனுமதிக்கப்படும்‌ என பொதுச்சுகாதாரத்துறை மூலம்‌ அறிவிப்பு வந்துள்ளது.

அதேபோல்‌ ஓமைக்ரான்‌ என்ற ஒரு புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ்‌ அதிக வீரியமுடையதாகவும்‌ வேகமாகப் பரவும்‌ தன்மையுடையதாகவும்‌ தென்னாப்பிரிக்கா நாட்டில்‌ கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வெளிநாடுகளிலிருந்து வரும்‌ பயணிகள்‌ விமான நிலையத்தில்‌ RTPCR பரிசோதனை செய்யப்பட்டு தங்களது வீட்டில்‌ 14 நாட்கள்‌ தனிமைப்படுத்திக்‌ கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

பொது சுகாதார இயக்குநரகம்‌ தகவலின்படி, கடந்த மூன்று மாதங்களில்‌ இறந்தவர்களில்‌ 95 சதவீதம்‌ பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள்‌ ஆவர்‌. மேலும்‌, நாளொன்றுக்கு கொரோனா பாதிப்பு இரு மடங்கு அதிகமாக இருப்பதால்‌ இந்த வைரஸ்‌ தொற்றிலிருந்து தங்களை முழுவதும்‌ பாதுகாத்துக்கொள்ள முதல்‌ தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளாதவர்களும்‌ மற்றும்‌ இரண்டாம்‌ தவணை தடுப்பூசி செலுத்தத் தகுதியுடையவர்கள்‌ அனைவரும்‌ 100 சதவீத பாதுகாப்பைப் பெற முகாமில்‌ கலந்து கொண்டு பயன்பெறுமாறு” மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...