கோவை வழித்தடத்தில் முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கம்

கோவை வழித்தடத்தில் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் விரைவு ரயில்கள் ஜனவரி 20 ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை வழித்தடத்தில் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் விரைவு ரயில்கள் ஜனவரி 20 ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-

எா்ணாகுளம் - பெங்களூரு இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்:12678) 4 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் ஜனவரி 20 ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

கோவை - திருப்பதி விரைவு ரயில் (எண்: 22616) 6 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...