கோவையில் நாளை எந்தெந்த பகுதியில் மின்தடை? மின்சார வாரியம் அறிவிப்பு

சீரநாயக்கன்பாளையம் மற்றும் சூலூர் பகுதிகளில் உள்ள துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 21-ந் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைப்பெறுவதால், இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது.


கோவை:சீரநாயக்கன்பாளையம் மற்றும் சூலூர் பகுதிகளில் உள்ள துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 21-ந்வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைப்பெறுவதால், மின்தடை ஏற்படும். இதனால் இந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது.

கோவை சீரநாயக்கன்பாளையம் செயற்பொறியாளர் வைத்தீஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சீரநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும். பராமரிப்பு பணி காரணமாக இந்த மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின்வெட்டு ஏற்படும் பகுதிகள்:-

யமுனா நகர், காளப்பநாயக்கன்பட்டி, ஜி. சி. டி. நகர், கே. டி. என். பாளையம், மருதம் நகர், நவாவூர் பிரிவு, பாரதியார் பல்கலைக்கழகம், சோமயம்பாளையம், வசந்தம் நகர், ஐ.ஓ.பி. காலனி, மருதமலை, அகர்வால் ரோடு, கணுவாய், கே. என். ஜி. புதூர், தடாகம் ரோடு ஆகிய பகுதிகளில் பகுதிகளில் மின்சாரம் இருக்காது எனக் கூறியுள்ளார்.

இதேபோல சூலூர் ஒண்டிபுதூர் செயற்பொறியாளர் முருகையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

சூலூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

அதன் பகுதிகள் வருமாறு:-

சூலூர், டி.எம். நகர், பி.எஸ். நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம், எம். ஜி. புதூர், மற்றும் ராவத்தூர் இப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...