நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு; கோவைக்கு பெண் மேயர்..!

சென்னை, தாம்பரம், கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய நகரங்களுக்கு பெண் மேயர் பதவி. சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளுக்கு பட்டியலின பெண் மேயர்கள்.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டது.

அதன்படி சென்னை, தாம்பரம் ஆகிய 2 மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு (பொதுப் பிரிவு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின (ஆண்/பெண்) போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளின் மேயர் பதவி பெண்களுக்கு (பொது பிரிவு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...