கோவை மாநகராட்சி சாலையோர பார்க்கிங் கட்டணம் ரத்து

கோவை மாநகராட்சியில் அமல்படுத்தப்பட இருந்த சாலையோர பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்து மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் அமல்படுத்தப்பட இருந்த சாலையோர பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்து மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ வாகனப்‌ போக்குவரத்து நிறைந்த சாலையோரப்‌ பகுதிகளில்‌ வாகன நிறுத்துமிடங்கள்‌ (On Street Parking) அமைக்கும்‌ பொருட்டு 30-சாலைகள்‌ தேர்வு செய்யப்பட்டு அதில்‌ வாகன நிறுத்துமிடங்களை அமைக்கின்ற தனியார்‌ நிறுவனங்கள்‌ மூலம்‌ 5-வருட காலங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ ஏற்படுத்தவும்,‌ வாகன நிறுத்துமிடங்களுக்கான கட்டணம்‌ நிர்ணயம்‌ செய்தும்‌ இதே போல்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ தேர்வு செய்யப்படும்‌ வாகன நிறுத்தும்‌ இடங்களில்‌ இரண்டு சக்கர மற்றும்‌ நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு மற்றும்‌ மாத வாடகை கட்டணமும்‌ நிர்ணயம்‌ செய்யப்பட்டது.

இது தொடர்பாகத் தகுதி வாய்ந்த ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து விருப்பக்‌ கேட்பு அறிக்கை பெறப்படவில்லை. எனவே, மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ வாகன நிறுத்துமிடங்களுக்கென (On Street Parking and Off Street Parking) நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்களை ஒப்பந்ததாரர் மூலம்‌ வசூலிக்கும்‌ திட்டம்‌ ரத்து செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧ரா தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...