கோவை மண்டலத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

ஏப்ரல் 30ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


கோவை: கோவை மண்டலத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க உள்ளவா்கள் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை கோவை மண்டலத்துக்கு உள்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூா், நீலகிரி, கரூா் ஆகிய மாவட்டங்களில் 2022-23 ஆம் கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், நீண்டகால தொழில் பிரிவுகள் நடத்த அங்கீகாரம் பெறுதல், அங்கீகார நீட்டிப்பு ஆகியவற்றுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு சென்னை, கிண்டியில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 044-22500099, 0422-22501083, 0422-22500199 ஆகிய எண்களிலோ தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...