பொங்கல் விடுமுறை நாட்களில் கோவைக்கு கூடுதல் கட்டுபாடுகள்...!

கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பொங்கல் விடுமுறை நாட்களில் அனைத்து வழிபாட்டு தளங்கள், பூங்காக்கள், சுற்றுலாத்தளங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன்.


கோவை: கோவையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுபடுத்த மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூடுதல் கட்டுபாடுகளை அறிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 1500 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"பொங்கல் விடுமுறை நாட்களில் அனைத்து வழிபாட்டு தளங்கள், பூங்காக்கள், சுற்றுலாத்தளங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டியது அனைத்து பொதுமக்களின் கடமையாகும். மக்கள் அனைவரும்தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, அதிகரித்து வரும் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த பாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்", இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எல்.சமீரன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...