பொங்கல் பண்டிகை: வெளியூர் செல்லும் மக்களுக்கு கோவையிலிருந்து 200-சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கோவையிலிருந்து திருச்சி, மதுரை, தேனி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்குக் கூடுதலாக 200-சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.


கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கோவையிலிருந்து திருச்சி, மதுரை, தேனி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்குக் கூடுதலாக 200-சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகை வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோவையில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவார்கள்.

இதனால் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அலைமோதும் இதனைத் தவிர்ப்பதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு, சேலம், திருப்பூர், தர்மபுரி, நாமக்கல், உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதேபோல சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமேஸ்வரம், திருச்செந்தூர், நெல்லை, ராஜபாளையம், குமுளி, தேனி, ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கோவையிலிருந்து திருச்சி மதுரை தேனி சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்குக் கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டம் சார்பில் கொடிசியா வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்காலிக பேருந்து நிலையத்தில் நாளை புதன்கிழமை முதல் பேருந்துகள் இயக்கப்படும்.

கொரோனா பரவலை முன்னிட்டு அரசின் வழிகாட்டுதலின்படி 75 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் பேருந்தில் பயணிகள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி அமர வைக்கப்படுவர். முக கவசம் அணியாத பயணிகள் பேருந்தில் ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...