கோவையில் ஒருங்கிணைந்த மேல்நிலை பொதுத்தேர்வு நாளை நடைபெறும் - மாவட்ட ஆட்சியர் தகவல்..!

அதேசமயம், கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள 10 தேர்வு மையங்களில் நாளை நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிக்கான எழுத்துத் தேர்வு வருகிற 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் ஒருங்கிணைந்த மேல்நிலை பொதுத்தேர்வு நாளை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பணியாளர் தேர்வாணையத்தின் எஸ். எஸ்.சி. ப்ளஸ் டூ முடித்தவர்களுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலை பிரிவு 2020 என்ற தேர்வு நடக்கிறது.

இந்த தேர்வு கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ் புரம் மேற்கு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டபடி நடைபெற உள்ளது.

மேற்படி தேர்வு மையத்துக்குச் செல்ல ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலமாக கோவை ரயில் நிலையத்தில் இருந்தும் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு கூடத்துக்கு வரும்போது தேர்வர்கள் நுழைவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டும். இது போன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஆணைப்படி, கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள 10 தேர்வு மையங்களில் நாளை நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிக்கான எழுத்து தேர்வு வருகிற 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...