கோவையில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெற வேண்டும்: மாநகராட்சி ஆணையாளர்‌

திருமணம்‌ போன்ற சுப நிகழ்ச்சிகள்‌ குறித்த விபரங்களை மாநகராட்சியின்‌ கோவிட்‌ இணையதளத்தில்‌ தெரியப்படுத்திட வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவித்துள்ளார்‌.



கோவை: திருமணம்‌ போன்ற சுப நிகழ்ச்சிகள்‌ குறித்த விபரங்களை மாநகராட்சியின்‌ கோவிட்‌ இணையதளத்தில்‌ தெரியப்படுத்திட வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவித்துள்ளார்‌.

தமிழ்நாட்டில்‌ கொரோனா நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுக்கும்‌ நடவடிக்கைகளை மேற்கொள்ளும்‌ வகையிலும்‌, பரவி வரும்‌ உருமாறிய கொரோனா ஓமைக்கரான்‌ வைரஸ்‌ நோயைக் கருத்தில்‌ கொண்டும்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ நலன்‌ கருதியும்‌ தமிழ்நாடு அரசு மாநிலம்‌ முழுவதும்‌ 06.01.2022 முதல்‌ வார நாட்களில்‌ இரவு 10.00 மணி முதல்‌ காலை 5.00 மணி வரையிலும்‌ இரவு நேர ஊரடங்கும்‌, ஞாயிற்றுக்‌ கிழமைகளில்‌ முழு ஊரடங்கும்‌ நடைமுறைப்படுத்தி, புதிய கட்டுப்பாடுகள்‌ விதித்து உத்தரவிட்டுள்ளது.

அரசின்‌ கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைச் செயல்படுத்திடும்‌ வகையில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ 5-மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ உள்ள உணவகங்கள்‌, திருமண மண்டபங்கள்‌, விருந்து அரங்கங்கள்‌, சமூக நலக்கூடங்கள்‌ மற்றும்‌ கோயில்கள்‌ ஆகியவற்றில்‌ பதிவு செய்யப்படும்‌ திருமணம்‌ போன்ற சுப நிகழ்ச்சிகள்‌ குறித்த விபரங்களை https://covid.ccmc.gov.in/ccmc/bookingintimation என்ற மாநகராட்சியின்‌ கோவிட்‌ இணையதளத்தில்‌ தெரியப்படுத்திட வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...