கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க கோவை ஆட்சியர்‌ அறிவுரை

கொரோனா ‌வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க குறு சிறு, நடுத்தர மற்றும்‌ பெரிய நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர்‌ அறிவுரை வழங்கியுள்ளார்.


கோவை: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க குறு சிறு, நடுத்தர மற்றும்‌ பெரிய நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர்‌ அறிவுரை வழங்கியுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவும்‌ சூழலை முன்னிட்டு அரசு அறிவுறுத்தியுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும்‌.

தொழில்‌ நிறுவனங்களுக்குள்‌ நுழையும்‌ அனைத்து நபர்களையும்‌ உடல்‌ வெப்ப சோதனைக்கருவி கொண்டு வெப்பநிலையை அறிந்து மாற்றம்‌ இருக்கும்‌ சூழலில்‌ அவர்களைத் தொழிலகங்களுக்குள்‌ அனுமதிக்கக் கூடாது. கை கழுவும்‌ வசதியும்‌, கை சுத்திகரிப்பான்‌ வசதியும்‌ ஏற்படுத்தித் தர வேண்டும்‌.

பணியாளர்கள்‌ மற்றும்‌ தொழிலகங்களுக்குள்‌ வருபவர்கள்‌ இரண்டு மாஸ்க்‌ அணிந்து வர வேண்டும்‌. அனைத்து பணியாளர்களும்‌ இரண்டு தவணை கோவிட்‌ தடுப்பூசி கட்டாயம்‌ செலுத்தி இருக்க வேண்டும்‌. சமூக இடைவெளியை பின்பற்றப்பட வேண்டும்‌. இந்தக்‌ கட்டுப்பாடுகள்‌ பணியாளர்கள்‌, சுமை தூக்கும்‌ தொழிலாளர்கள்‌, வாகன ஒட்டுநர்கள்‌ மற்றும்‌ நிறுவனத்திற்கு வருகை தரும்‌ பார்வையாளர்கள்‌ என அனைவருக்கும்‌ பொருந்தும்‌.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத தொழில்‌ நிறுவனங்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌. மேலும்‌, ஊரடங்கு காலத்தில்‌ தொழிற்சாலையில்‌ பணிபுரியும்‌ பணியாளர்கள்‌ பணிக்குச் செல்லும்‌ போது தங்கள்‌ அலுவலக அடையாள அட்டை மற்றும்‌ தடுப்பூசி செலுத்திக்‌ கொண்டதற்கான சான்றிதழையும்‌ வைத்துக்கொள்ள வேண்டும்‌.

மேலும்‌, தகவல்‌ தொழில்நுட்ப நிறுவனங்களின்‌ பணியாளர்கள்‌ வீட்டிலிருந்தபடி பணிபுரிய அறிவுறுத்துமாறு நிறுவனங்கள்‌ கேட்டுக்‌கொள்ளப்படுகிறது. அனைத்துத்‌ தொழில்‌ நிறுவனங்களும்‌ அரசின்‌ நிலையான வழிகாட்டும்‌ நெறிமுறைகளைப் பின்பற்றி கோவை மாவட்டத்தில்‌ கொரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைக்குமாறு கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ சமீரன்‌ கேட்டுக்கொண்டுள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...