'கபீர் புரஸ்கார்' விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கபீர் புரஸ்கார் விருதுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வரும், 10-ம் தேதி மாலை, 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கபீர் புரஸ்கார் விருது 2022'க்கு வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவில், சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான கபீர் புரஸ்கார் விருது, தமிழக முதல்வரால் வழங்கப்படுகிறது.

இவ்விருதானது மூன்று அளவுகளில், தலா ஒருவர் வீதம் மூவருக்கு முறையே 20, 10, மற்றும் 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.

தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், போலீஸ், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக, அவர்களின் சமுதாய நல்லிணக்க செயல் அவர்கள் ஆற்றும் அரசு பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில்) இந்த பதக்கத்தைப் பெறத் தகுதியானவர்கள்.

இந்த விருது ஒரு ஜாதி, இனம், வகுப்பைச் சேர்ந்தவர்கள், பிற ஜாதி, இன வகுப்பைச் சார்ந்தவர்களை அல்லது அவர்களின் உடைமைகளை, வகுப்பு கலவரத்தின்போது அல்லது தொடரும் வன்முறையில் காப்பாற்றியது, அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

2022ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு, உரியத் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விரிவான சுய விபர குறிப்பு(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) விபரங்கள் மற்றும் அதற்கான ஆவணங்களுடன், ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வரும், 10-ம் தேதி மாலை, 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...