தரமற்ற சிமெண்ட் விற்பனை செய்தால் நடவடிக்கை –கோவை ஆட்சியர் எச்சரிக்கை

தரமற்ற சிமெண்ட உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தெரிவித்துள்ளார்.


கோவை :கோவை மாவட்டத்தில் தரமற்ற சிமெண்ட உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்திய அரசு வெளியிட்டுள்ள தரக்கட்டுப்பாடு சட்டத்தின்படி, தரச்சான்று குறியீடான(ISI)தரச்சான்று பெற்றுள்ள அனைத்து வகையான சிமெண்ட் தயாரித்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் குறியீடு இல்லாத சிமெண்ட் உற்பத்தி செய்தாலோ விற்பனை செய்தாலோ அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஆணையின் படி கோவை மாவட்டத்தில் தரச்சான்று குறியீடு இல்லாத சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...