முதியோர் இல்லங்களை பதிவு செய்ய கோவை ஆட்சியர் அறிவுறுத்தல்

கோவையில் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள், கட்டண முறையில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்களைப் பதிவு செய்ய ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோவையில் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள், கட்டண முறையில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்களைப் பதிவு செய்ய ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

ஆதரவற்ற முதியோர் வசித்து வரும் முதியோர் இல்லங்கள், கட்டண முறையில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்கள் ஆகியவை தமிழக அரசின் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் 2009-இன்கீழ் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள், கட்டண முதியோர் இல்லங்கள் அறக்கட்டளை, சங்க கட்டடத்தின் பதிவு, குறிக்கோள்கள் மற்றும் தீர்மானங்கள், ஆளும் குழு மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பட்டியல், கடந்த 3-ஆண்டு அறிக்கையின் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள், பட்டய பொறியாளரிடமிருந்து பெறப்பட்ட கட்டட உறுதித் தன்மை சான்றிதழ், தீயணைப்புத் துறை வழங்கும் தடையில்லா சான்று, சுகாதாரத் துறையினர் வழங்கும் சுகாதாரத்துச் சான்று, வட்டாட்சியரிடம் இருந்து கட்டட உரிமம் உள்பட 18-வகையான சான்றுகளை இணைத்து மாவட்ட சமூகநலத் துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...