வண்டி வேணுமா? வாகன பொது ஏல அறிவிப்பு.. கோவை காவல்துறையை உடனே அணுகுங்க.!!

கோவை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 25-நான்கு சக்கர வாகனங்கள், மற்றும் 21-இரண்டு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 46- வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டுக் கழிவு செய்யப்பட்ட 25-நான்கு சக்கர வாகனங்கள், மற்றும் 21-இரண்டு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 46- வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 05.01.2022 ஆம் தேதி காலை 10.00 மணிக்குக் கோவை அவினாசி சாலையில் உள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

ஏலம் எடுக்க விரும்புவோர் 04.01.2022-ஆம் தேதி மாலை 05.00 மணி வரை கோவை மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களைப் பார்வையிட்டுக் கொள்ளலாம்.

மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள், 04.01.2022 அன்றே ஒரு இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 1000/-மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 2000/-முன் பணம் செலுத்தி தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.

பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் ஏலம் எடுத்தவுடன் முழுத் தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (GST)(இருசக்கர வாகனங்களுக்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18%) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாகச் செலுத்தி வாகனத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Newsletter

கணியூர் பகுதியில் நாளை மின்தடை

கணியூர், கொல்லுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், காளியாபுரம் மற்றும் சங்கோத்திபாளையம் பகுதிகளில் ஜ...

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற...

கோவை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக...

மூன்று முக்கிய அரசியல் தலைவர்கள் கோவை வருகை: போக்குவரத்து மாற்றமும் விமான நிலைய கட்டுப்பாடும்

பிரதமர் Narendra Modi, முதல்வர் M.K. Stalin மற்றும் உள்துறை அமைச்சர் Amit Shah ஆகியோர் சனிக்கிழமை பிரசார நிகழ்வுகளுக்காக...

கோடை விடுமுறைக்கு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை - ஜெய்ப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 7 வரை இயக்கப்படும் என சேல...